சனி, 15 நவம்பர், 2025

பிஹாரில் ஆட்சியை தக்க வைத்த

 Bihar Vidhan Sabha Chunav Results 2025 Live Updates: பீகார் சட்டசபைத் தேர்தல் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், நவம்பர் 11 –ந்தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் 66.91% வாக்குப்பதிவு, பதிவானது. இது 1951-க்குப் பிறகு மாநிலத்தில் நடந்த அதிகபட்ச வாக்குப்பதிவாகும். அதேபோல் பீகார் தேர்தலில் இந்த முறை அதிகபட்சமாக பெண்கள் வாக்களித்துள்ளனர். 71.6% பெண்கள் வாக்களிக்க வந்த நிலையில், ஆண்கள் 62.8% மட்டுமே வாக்களித்தனர், இதனால் ஆண்கள் பின்தங்கிவிட்டனர்.

இந்த சட்டசபை தேர்தலில், 2,616 வேட்பாளர்களின் 1.4 லட்சம் வாக்குச்சாவடி முகவர்களுடன், சுமார் 8.5 லட்சம் வாக்குப்பதிவுப் பணியாளர்கள் நிர்வகித்தனர். பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், பா.ஜ.க - ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின்  கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. ஆர்.ஜே.டி - காங்கிரஸ் கட்சிகளின் மகாகட்பந்தன் கூட்டணி தோல்வி அடைந்தது.

அதே சமயம், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி வாக்காளர்கள் தங்கள் ஒரு மாற்று விருப்பமாக  உருவெடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள். இருப்பினும், அனைத்து கருத்துக் கணிப்புகளும் தேர்தல்கள் என்.டி.ஏ-க்குச் சாதகமாகவே செல்லும் என்றும், ஜன் சுராஜ் கட்சிக்கு சிறிய வாய்ப்பு கூட இல்லை என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறியது.

14 11 2025 

source https://tamil.indianexpress.com/india/bihar-assembly-election-results-2025-live-counting-bjp-rjd-aimim-jsp-updates-10681034