/indian-express-tamil/media/media_files/2025/11/14/trichy-steet-vendors-protest-2025-11-14-21-44-17.jpg)
தரைக்கடை வியாபாரிகளின் வாக்கு வங்கிகளை பெற்றுவிட்டு தரைக்கடை வியாபாரிகளுக்கு நேர்ந்த துயரங்களை சற்றும் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் அமைச்சர்கள் வீடுகளில் அமர்ந்து போராடுவோம் என்று வியாபாரிகள் எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொண்டனர்.
திருச்சி தெப்பக்குளம் தரைக்கடை வியாபாரிகளின் வாக்கு வங்கிகளை பெற்றுவிட்டு தரைக்கடை வியாபாரிகளுக்கு நேர்ந்த துயரங்களை சற்றும் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் அமைச்சர்கள் வீடுகளில் அமர்ந்து போராடுவோம் என்று வியாபாரிகள் எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொண்டனர்.
நீதிமன்ற உத்தரவுபடி திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் சுற்றியுள்ள பகுதிகளில் தரைக்கடைகள் அமைக்க நீதிமன்றம் அனுமதி மறுக்கப்பட்டது. திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்யக்கூடாத இடமாக அறிவித்து அங்குள்ள தரைக் கடைகளை அகற்றவும், தற்போது சாலை வரை வியாபாரம் நடத்தி வரும் கடைகளுக்கு உரிய மாற்று இடம் வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/11/14/trichy-theppakulam-8-2025-11-14-21-47-47.jpeg)
இதையடுத்து, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், வெண்டிங் கமிட்டியுடன் நடத்திய ஆலோசனையில், தெப்பக்குளத்தை சுற்றி உள்ள பகுதியில் தற்போது சாலை வரை வியாபாரம் நடத்தி வரும் கடைகளை ஹோலி கிராஸ் கல்லூரி அருகில் உள்ள பழைய நகராட்சி அலுவலக இடத்தில் மாற்றி அமைத்துக் கொள்ளவும், ஏனைய கடைகளை மாற்று இடத்துக்கு மாற்றிக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/11/14/trichy-theppakulam-7-2025-11-14-21-47-46.jpeg)
191 கடைகள் உள்ள நிலையில் தற்போது பழைய நகராட்சி அலுவலகத்தில் 148 கடைகள் மட்டுமே செயல்படமுடியும், இதில் வெண்டிங் கமிட்டியை சேர்ந்த தொழிற்சங்கத்தில் உள்ள தரைக்கடை வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து கடை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வெண்டிங் கமிட்டி மூலம் அனைத்து தரைக்கடை வியாபாரிகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்ட நிலையில், அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் உரிய முறையில் கடைகளை ஒதுக்கீடு செய்யாமல் தன்னிச்சையாக செயல்படுவதை கண்டித்தும் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தரைக்கடை வியாபாரிகள் தெப்பக்குளம் காந்தி சிலையின் அருகில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/11/14/trichy-theppakulam-6-2025-11-14-21-47-46.jpeg)
தங்களுக்கு உரிய மாற்று கடை வழங்காவிட்டால் தொடர்ந்து தங்களது போராட்டத்தை தீவிர படுத்தவோம், அதேநேரம் தரைக்கடை வியாபாரிகளின் வாக்கு வங்கிகளை பெற்றுவிட்டு தரைக்கடை வியாபாரிகளுக்கு நேர்ந்த துயரங்களை சற்றும் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் அமைச்சர்கள் வீடுகளில் அமர்ந்து போராடுவோம் என்றும் எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொண்டனர். இதனால், திருச்சியில் வர்த்தக பகுதியான என்.எஸ்.பி சாலை பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவியது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/11/14/trichy-theppakulam-2-2025-11-14-21-47-46.jpeg)
முன்னதாக, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 1, மலைக்கோட்டை தெப்பக்குளம் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளை மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், பொறியாளர்களுடன் ஆய்வு செய்தார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/11/14/trichy-theppakulam-4-2025-11-14-21-47-46.jpeg)
கடந்த 1995 காலகட்டத்தில் மாநகராட்சி ஆணையராக இருந்த ஸ்வரன்சிங் பல தடைகளையும் கடந்து திருச்சி என்.எஸ்.பி சாலையில் பெரும் முதலாளி முதல் தரைக்கடை வரை ஆக்கிரமப்புகளை அகற்றி மாநகராட்சி மக்களின் மனதில் இடம் பிடித்தார். அவர் பணியிட மாறுதல் பெற்ற பிறகு மீண்டும் அத்தனை ஆக்கிரமிப்புகளும் முளைத்தன.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/11/14/trichy-steet-vendors-protest-2025-11-14-21-44-17.jpg)
இந்த நிலையில் வருடங்களுக்கு பிறகு மாநகராட்சி ஆணையராக சமீப காலத்தில் பொறுப்பேற்ற மதுபாலன் திருச்சி என்.எஸ்.பி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நேற்று இரவு அகற்றி திருச்சி மாநகராட்சி மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். புதுப்பொலிவுடன் சாலைகள் காட்சியளிப்பதால் பொதுமக்கள் மாநகராட்சி ஆணையருக்கு மகிழ்ச்சியுடன் நன்றிகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
14 11 2025
source https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-theppakulam-street-vendors-protest-after-the-corporation-administration-removed-the-street-vendors-shops-10775695





