/indian-express-tamil/media/media_files/2025/11/21/dubai-air-show-indian-tejs-2025-11-21-17-15-42.jpg)
Tejas jet crash at Dubai Air Show
Tejas fighter jet crash in Dubai: துபாயில் நடந்த விமானக் கண்காட்சி செயல் விளக்கத்தில் பங்கேற்ற இந்திய விமானப்படையைச் சேர்ந்த தேஜாஸ் போர் விமானம் ஒன்று, விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியதில் விமான மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் சுமார் 2:10 மணிக்கு பெரும் திரளான பார்வையாளர்கள் முன் வான்வழி சாகசத்தை நடந்து கொண்டிருந்தபோது அந்த விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி பரிதாபமாக மரணமடைந்தார். இந்த தகவலை இந்திய விமானப்படை (IAF) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய விமானப்படை தெரிவித்தது என்ன?
இந்த விபத்து குறித்து விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று இந்திய விமானப்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியாக ஒரு அறிக்கையில், “இன்று, துபாய் விமானக் கண்காட்சியில் வான்வழி சாகசத்தில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படையின் தேஜாஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். இந்த உயிர் இழப்புக்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், துயரமான இந்த நேரத்தில் உயிரிழந்த விமானியின் குடும்பத்தினருடன் உறுதியாக நிற்கிறது. விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படுகிறது,” என்று விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
விபத்து நடந்த விமான நிலையத்திற்கு அருகில், தீப்பிழம்பைத் தொடர்ந்து அடர்த்தியான கரும்புகை எழும்பியது. இந்த சம்பவம் கண்காட்சிக்குக் கூடிவந்திருந்த குடும்பங்கள், குழந்தைகள் உள்ளிட்ட மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. விபத்து நடந்த இடத்திற்கு அவசர கால மீட்புக் குழுக்கள் விரைந்துள்ளன.
தேஜாஸ் என்றால் என்ன?
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) இணையதளத்தின் விளக்கத்தின்படி, தேஜாஸ் என்பது 4.5-வது தலைமுறை போர் விமானம் ஆகும். இது தாக்குதல் வான்வழி ஆதரவு, நெருங்கிய சண்டை மற்றும் தரைத் தாக்குதல் போன்ற பணிகளைக் கையாள வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பணிகளுக்கு ஏற்றவாறு கட்டப்பட்ட இந்த விமானம், தரை மற்றும் கடல்வழி நடவடிக்கைகளுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது,
இந்த விமானம் இந்தியாவின் மிகவும் இணக்கமான உள்நாட்டுத் தளங்களில் ஒன்றாகும். தேஜாஸ் குடும்பத்தில் விமானப்படை மற்றும் கடற்படை இரண்டிற்குமான ஒற்றை இருக்கை கொண்ட போர் ரக விமானங்கள் மற்றும் இரு சேவைக்கான இரட்டை இருக்கை கொண்ட பயிற்சி விமானங்கள் ஆகியவை அடங்கும். இதன் மிகவும் மேம்பட்ட பதிப்பான எல்.சி.ஏ எம்.கே1ஏ (LCA Mk1A) ரகம் போர் திறன் மற்றும் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் திறனை மேம்படுத்த குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.
இது ஒரு ஏ.இ.எஸ்.ஏ (AESA) ரேடார், ரேடார் எச்சரிக்கை மற்றும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் ஜாமிங் (jamming) வசதியுடன் கூடிய மேம்பட்ட மின்னணு போர் அமைப்பு, டிஜிட்டல் வரைபட ஜெனரேட்டர், ஸ்மார்ட் மல்டிஃபங்க்ஷன் டிஸ்பிளேக்கள், ஒருங்கிணைந்த கேள்வி/பதில் அமைப்புகள் மற்றும் ஒரு நவீன ரேடியோ உயரமானி ஆகியவற்றுடன், அதன் செயல்பாட்டுத் திறனை பலப்படுத்தும் பல அதிநவீன அமைப்புகளையும் கொண்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/tejas-fighter-jet-crashes-during-dubai-air-show-demo-10799822





