/indian-express-tamil/media/media_files/2025/11/20/trichy-protest-2025-11-20-20-36-20.jpg)
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க போராட்ட ஆயத்த மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் இரா. பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் கே.வி. நடராஜன், எட்டியப்பன், வேலாயுதம், வரதராஜன், மாநில செயலாளர்கள் என். அண்ணாதுரை, பி. முத்துராமலிங்கம், இரா.ஜெபமாலை மேரி, ஆர். ஞானசேகரன், தமிழ்ச்செல்வி, சுப்பிரமணியன், மாநில தணிக்கையாளர்கள் வெங்கடேசன், சுந்தர தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி மாவட்ட செயலாளர் தங்கவேலு அனைவரையும் வரவேற்று பேசினார். பொதுச்செயலாளர் மகாலிங்கம் நோக்க உரை நிகழ்த்தினார். தமிழ்நாடு அரசு வருவாய் துறை ஊழியர் சங்க மதிப்புறு தலைவர் கங்காதரன், ஓய்வூதியர் பேரமைப்பு மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், பி. எஸ்.எஸ். மணி ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாநில பொருளாளர் திருவேங்கடம் நன்றி கூறினார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/11/20/teachers-2025-11-20-20-42-46.jpg)
கூட்டத்தில் புதிய பென்ஷன் ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். பென்சன் திட்டத்தை எந்த சூழலிலும் நிறுத்தக்கூடாது. ஓய்வூதியர் அகவிலைப்படியை நிறுத்தும் எட்டாவது ஊதியக்குழு பரிந்துரையை திருத்தி அமைக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற டிசம்பர் 23ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது, டிசம்பர் 17ம் தேதி மாவட்ட வாரியாக ஓய்வூதியர் தினம் கொண்டாடுவது, 21ம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி 5000 பேர் திரண்டு பேரணி நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
செய்தி: க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-retired-government-employees-association-protest-10797324





