சர்வதேச அளவில் ஹாக்கி மைதானம்; மதுரையில் திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்
/indian-express-tamil/media/media_files/2025/11/22/madrai-mh-2025-11-22-23-33-33.jpg)
மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் ரூ.20 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் இன்று திறக்கப்பட்டது. தமிழ்நாட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக கலந்து கொண்டு இம்மைதானத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன், சர்வதேச போட்டிகள் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய ஹாக்கி மைதானம், மதுரை விளையாட்டு வளர்ச்சியில் ஒரு முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.
22 11 2025
இந்த மைதானத்தில் வரும் 28ஆம் தேதி 14வது ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் தொடங்குகின்றன. உலக நாடுகளைச் சேர்ந்த இளம் வீரர்கள் பங்கேற்கும் இந்த சர்வதேச தொடரை முன்னிட்டு, மதுரை நகரம் உற்சாகத்துடன் தயாராகி வருகிறது.
source https://tamil.indianexpress.com/sports/tamilnadu-madurai-international-hockey-ground-opening-update-10803580





