சனி, 22 நவம்பர், 2025

எஸ்.ஐ.ஆர் படிவம் பூர்த்தி செய்வதாக ஓ.டி.பி கேட்கும் மோசடி கும்பல்; புதுச்சேரி போலீஸ் எச்சரிக்கை

 

Police

எஸ்.ஐ.ஆர் படிவத்தை பூர்த்தி செய்து வருகிறோம். உங்கள் ஓ.டி.பி சொல்லுங்கள் என யாராவது தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஓ.டி.பி கேட்டால் கொடுக்க வேண்டாம் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்து உள்ளனர்.

21 11 2025 

இது குறித்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தெரிவித்தாவது;

சமீப காலமாக எஸ்.ஐ.ஆர் (SIR) படிவம் நிரப்பும் வேலை இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த சூழலை பயன்படுத்தி இணைய குற்றவாளிகள் பொதுமக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு படிவம் நிரப்புவது சம்மந்தமாக பேசுகிறோம். அதற்கு உங்கள் தொலைபேசியில் ஓ.டி.பி எண் (OTP Number) வந்திருக்கும் அதை கூறுங்கள் என்று கேட்டால், அதனை நம்பி அந்த ஓ.டி.பி எண்ணை பகிரவேண்டாம். அப்படி யாரேனும் கேட்டால் எங்களுடைய பி.எல்.ஓ.,விடம் (BLO) நேரிடையாக சென்று கொடுக்கிறோம் என்று கூறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

மேலும் உங்களை கட்டாயப்படுத்தி கேட்கும் பட்சத்தில் உங்களுக்கு அழைப்பு வந்த எண்ணை குறித்து கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ அல்லது 1930 மூலமாகவோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கும்படியும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் உங்கள் தொகுதி பி.எல்.ஓ.,வின் பெயர், அவரின் தொலைப்பேசி எண் ஆகியவற்றை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் அவர்களை தொடர்பு செய்து சந்தேகத்தை தீர்த்து கொண்டு இணைய வழி மோசடிக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் இணைய வழி குற்றம் சம்பந்தமாக புகார் கொடுக்கவும் அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் இணைய வழி காவல் நிலையத்தில் இலவச தொலைபேசி எண்: 1930 மற்றும் 0413-2276144/ 9489205246 மற்றும் மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in தொடர்பு கொள்ளலாம். இணையத்தில் புகார் அளிக்க www.cybercrime.gov.in ஐ பயன்படுத்தவும்.

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி


source https://tamil.indianexpress.com/india/puducherry-cybercrime-police-warns-otp-fraud-to-sir-form-filling-10799842