# ஹெலிகாப்டர்கள் மூலம் போர்க்கால அடிப்படையில்
மீட்புப்பணி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால்
தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்:
-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கை!
சென்னையில் பெரும் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சைதாப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மீட்புப்பணியினர் யாருமே நெருங்க முடியாத நிலை அங்கு ஏற்பட்டுள்ளது. நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் படகுகள் மூலம் மீட்புப்பணி மேற்கொள்வதும் சாத்தியமில்லாமல் போயுள்ளது. ஆபத்தான பகுதியாக இருந்தாலும் பரவாயில்லை; மக்கள் உயிர் முக்கியம் என அந்தப் பகுதிக்கு தங்களது உயிரையும் துச்சமாக மதித்து மீட்புப்பணிக்காகச் சென்ற இரு நூறுக்கும் மேற்பட்ட டிஎன்டிஜேவின் செயல்வீரர்கள் போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். எனவே பெரும் பாதிப்புக்குள்ளான சைதாப்பேட்டை உள்ளிட்ட இதுபோன்ற பல பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலமே தவிர வேறு வழிகளில் மீட்புப்பணி செய்ய இயலாத நிலை உள்ளது
ஆனால் அரசாங்கமோ மீட்புப்பணி என்ற பெயரில் ஒரே ஒரு ஹெலிகாப்டரை வைத்து படம்காட்டிக் கொண்டு உள்ளது. அங்கு பல சகோதரர்கள் கைக்குழந்தைகளுடன் இரண்டு நாட்களாக உணவு இல்லாமல் ஆண்களும், பெண்களும், முதியவர்களும், கர்ப்பிணிப் பெண்களும் உயிருக்குப் போராடி வருகின்றார்கள். உடனடியாக அதிகமான ஹெலிகாப்டரை கொண்டு வந்து மீட்புப்பணிகளை முடுக்கிவிட அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் ஆவண செய்ய வேண்டும் என டிஎன்டிஜே கோரிக்கை விடுக்கின்றது.
24 மணி நேரத்திற்குள் தமிழக அரசு இதைச் செய்யாவிட்டால் புகைப்படத்திற்கு மட்டுமே போஸ் கொடுக்க வரும் தமிழக அமைச்சர்களை பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி விரட்டி அடிப்போம்; தலைமைச்செயலகத்த
ை முற்றுகை இட்டு அரசின் கையாலாகாத்தனத்த
ை அம்பலப்படுத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்படிக்கு,
எம்.முஹம்மத் யூசுஃப்,
பொதுச் செயலாளர்