மாற்று மத நண்பர்கள் முஸ்லிம்களை பாராட்டுவதை முகநூல் முழுக்க பரப்புகிறோம் என்றால் அது ஏதோ பெருமைக்காக செய்வது என்று யாரும் தயவு செய்து எண்ணி விடாதீர்கள்..
ஒவ்வொன்றும் நாங்கள் வடித்துக் கொண்டிருக்கும் ஆனந்தக் கண்ணிரின் வெளிப்பாடு..!ஆளும் ஆட்சியாளர்களும், ஊடகங்களும் எங்களை புண்படுத்தியதெல்லாம் வெறும் வார்த்தைகளால் விளக்கி விட முடியாதது..
எங்கள் மதம் அன்பை தாண்டா போதிக்குது.. அன்பை தாண்டா போதிக்குது.. என்று கத்தி கத்தியே பல வருடங்களை கடத்தி விட்டோம்..
யாரோ இரண்டு முட்டாள்கள் செய்வதற்கெல்லாம் எங்களையும்
எங்கள் மதத்தையும் இழிவுப்படுத்தாதீர்கள்... என்று நாங்கள் இட்ட ஓலங்கள் காற்றோடு கரைந்து போயின..ஆனாலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்தோம்..ஏனோ தெரியவில்லை, அணைத்து ஆட்சியாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் அதில் அலாதி ஆர்வம்..
எங்கள் மதத்தையும் இழிவுப்படுத்தாதீர்கள்... என்று நாங்கள் இட்ட ஓலங்கள் காற்றோடு கரைந்து போயின..ஆனாலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்தோம்..ஏனோ தெரியவில்லை, அணைத்து ஆட்சியாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் அதில் அலாதி ஆர்வம்..
பாய்மார்கள் கடையில் சாமான் வாங்காதே.. பாயா? வாடகைக்கு வீடு கொடுக்காதே..பாய்க்கு கம்பெனி வாடைக்கு தராதே இப்படியான ஒரு நிலை இந்து சமூக மக்கள் மனதில் திணிக்கப்பட்டுப் போனது.
இவையெல்லாம் எங்கள் உள்ளத்தில் ஏற்படுத்திய வடுக்கள் எத்தனை ஆழமானது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.. ஒரு இயற்கை பேரழிவு தானா எங்களை சரியாய் அடையாளம் காட்ட வேண்டும்??
ஒருவரை வாழ வைத்தவர் இந்த சமுதாயத்தையே வாழ வைத்ததற்கு சமம்.. ஒருவரை கொலை செய்பவர் இந்த சமுதாயத்தையே கொலைசெய்ததற்கு சமம்.அல்குர்ஆன் 5.32
இது எங்கள் குரானின் போதனை.
இது எங்கள் குரானின் போதனை.
நாங்கள் ஒருகாலும் வன்முறைக்கு துணை போகக்கூடியவர்கள் இல்லை.. அதை எங்கள் சக மாற்று மத அன்பர்களே உணர்ந்து விட்டார்கள் என்பதை காணும் போது உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளி குதிக்கிறது.
பாருடா.. என் ஹிந்து நண்பன் என்னை பாராட்டுகிறான் பாரு... என் கிறித்தவ நண்பன் என்னை பாராட்டுகிறான் பாரு...என்று.. மகிழ்ச்சியை வெளிக்காட்டும் குழந்தைகளின் மனநிலையில் தான் நாங்கள் இப்போது இருக்கிறோம்.
[படித்ததில் பிடித்தது]