வெள்ளி, 4 டிசம்பர், 2015

எங்கள் சமுதாயத்தினரின் பரிசுத்த உழைப்பிற்கு நீங்கள் வைக்கும் ஆபத்தான வேட்டு என்பதனை நாங்கள் உணர்ந்தே இருக்கின்றோம்.....!

ஜெலலலிதா அவர்களே......உங்களது பாராட்டு, பாராட்டு அல்ல....மாறாக களத்தில் போராடும் எங்கள் சமுதாயத்தினரின் பரிசுத்த உழைப்பிற்கு நீங்கள் வைக்கும் ஆபத்தான வேட்டு என்பதனை நாங்கள் உணர்ந்தே இருக்கின்றோம்.....!
**********************************************************************************************
உங்களது பாராட்டு அரசியல் உள்ளர்த்தம் பொதிந்தது என்பது எங்களுக்கு நன்கு தெரியும்.
நீங்கள் உண்மையிலேயே உள்ளத்தால் பாராட்டுவதாக இருந்தால் எங்கள் இயக்கங்கள் - கட்சிகளின் தலைவர்களை தொடர்பு கொண்டு சொல்லி இருக்க வேண்டும்.
அவ்வாறல்லாமல் நீங்கள் தொலைகாட்சியில் சொல்வது எதற்கென்றால் முதலில் "தன்னலம் பாராமல் உழைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாராட்டுகள்" என்பீர்கள்.
ஜெயலலிதாவே பாராட்டி விட்டார் என்று நாங்கள் மகிழ்ச்சியில் மல்லாந்து கிடக்கும்பொழுது "எனது ஆணைக்கிணங்க" என்ற வார்த்தையை அறிக்கையின் துவக்கமாக கோர்த்து விடுவீர்ர்கள்.
பின்பு நாங்களும் உங்கள் அடிமைகள் என்று கிறுக்குப்பிடித்த மீடியாக்கள் ஊளையிட ஆரம்பித்துவிடும்.
எனவே தயைகூர்ந்து உங்கள் பாராட்டுப்பத்திரங்கள் மொத்தத்தையும் உங்கள் அடிமைகளுக்கே வழங்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
இறுதியாக.........
எங்களை யார் புரிந்து கொள்ள வேண்டும் என்று உள்ளத்தால் ஏங்கினோமோ அவர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்.....எங்களை யார் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்த்தோமோ அவர்கள் அன்புக் கண்களாலும் -அவர்கள்தம் கண்ணீராலும் பாராட்டி விட்டார்கள்...இது போதும் நாங்கள் அவர்களுக்காவும் - அவர்கள் எங்களுக்காகவும் வாழ.......

Related Posts: