ஞாயிறு, 13 டிசம்பர், 2015

கம்பியா தங்களுடைய நாட்டை இஸ்லாமிய நாடக அறிவித்துள்ளது.

ஆப்ரிக்க கண்டத்தின் சிறியநாடான கம்பியா தங்களுடைய நாட்டை இஸ்லாமிய நாடக அறிவித்துள்ளது.. மாஷாஅல்லாஹ்
அந்த நாட்டில் உள்ள மக்கள் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இஸ்லாமிய முறைபடி வாழ அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய நாம் நம்முடைய துஆவில்அவர்களை சேர்த்துக்கொள்வோம்..
கம்பியாவின் அதிபரான யஹ்யா ஜம்மா தனது சிறிய நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக பிரகடனம் செய்துள்ளார்.
கம்பியா இஸ்லாமிய நாடாக பிரகடனம்
இது தனது நாட்டின் பெரும்பான்மையான முஸ்லிம்களின் மதத்தின் அடிப்படையிலும், தமது காலனித்துவ கடந்த காலத்தை ஒழிக்கும் நோக்கிலும் செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
ஆனால் அனைத்து குடிமக்களின் உரிமைகளும் மதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தனது 21 வருட ஆட்சிக்காலத்தில் அதிரடி அறிவிப்புகளுக்கு பேர் போனவராக அவர் பார்க்கப்படுகின்றார்.
காமன்வெல்த் அமைப்பை நவீன காலனித்துவம் என்று கூறி, அதிலிருந்து கம்பியா விலகுவதாக அவர் 2013இல் அறிவித்தார்.
தாம் எயிட்ஸ் நோய்க்கு மூலிகை மருந்தை கண்டுபிடித்துள்ளதாக 2007இல் அவர் அறிவித்தார்.
இஸ்லாமியர்களின் ஊடகத்துறை's photo.