திங்கள், 7 டிசம்பர், 2015

முஸ்லிம்களுக்கு கெட்டபெயர் ஏற்படுத்தியுள்ளது முஸ்லிம் விரோத மீடியாக்கள்

முஸ்லிம் ஏன் தங்கள் சேவைகளை உலகறிய செய்ய வேண்டும்? பதில் தரும் பிற மத சகோதரன். Muthu Raja முஸ்லிம்கள் தங்களின் இந்த உதவிகளை முகநூல் மூலம் மற்றவர்களிடம் கொண்டுசெல்ல மிக பெரிய காரணமும் உள்ளது எவனோ ஒரு பொறம்போக்கு எங்காவது ஒரு மூலையில் தவறு செய்தாலும் அவனின் முஸ்லிம் பெயரை வைத்து ஏதோ இஸ்லாமிய சமூகம் ஒட்டுமொத்தமும் தவறு செய்துவிட்டது போலவும் முஸ்லிம்கள் அனைவருமே தீவிரவாதிகள் போலவும் பேப்பரிலும் டிவியிலும் போட்டு நல்லவர்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு கெட்டபெயர் ஏற்படுத்தியுள்ளது முஸ்லிம் விரோத மீடியாக்கள் இதை பல முஸ்லிமல்லாத சகோதரர்களும் நம்பி முஸ்லிம்களை எதிரிகளாகவே பார்க்கும் சூழ்நிலை இருந்தது இந்நிலையில் முஸ்லிம்கள் தங்கள் சேவைகளை விளம்பரபடுத்த காரணமே முஸ்லிம்கள் தீவிரவாதிகள் அல்ல , முஸ்லிம் அல்லாதோரை தங்கள் சகோதரர்களாகவே பார்த்து உதவுகின்றோம் என்பதை முஸ்லிம் அல்லோதோருக்கு புரியவைக்கவே இதை விளம்பர படுத்துகின்றார்கள் பெருமை கொள்வோரை இறைவன் நேசிப்பதில்லை எனபது இறைவனின் வார்த்தை ஆகவே இது பெருமைக்காக போடும் பதிவுகளல்ல மாறாக முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு நாங்கள் உங்கள் எதிரிகள் அல்ல நாங்களும் உங்கள் சகோதரர்களே என்று புரியவைக்கவே முஸ்லிம்கள் தங்கள் சேவைகளை பதிவாக போடுகின்றார்கள் முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதோருக்கு உதவுவதும் முஸ்லிம் அல்லாதோர் முஸ்லிம்களுக்கு உதவுவதும் தான் இந்தியாவின் அழகே

Related Posts: