ஞாயிறு, 6 டிசம்பர், 2015

முஸ்லிம்கள் மற்றும் கிறித்தவர்கள் மீதான வெறுப்பு பரப்புரையைத்தான்.

1915-இல் திட்டமிடப்பட்டு 1925-இல் தொடங்கப்பட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ். ஏறத்தாள நூறு ஆண்டுகளாக அவ்வமைப்பு செய்து வருவது, முஸ்லிம்கள் மற்றும் கிறித்தவர்கள் மீதான வெறுப்பு பரப்புரையைத்தான். பெரும்பான்மை மக்களிடமிருந்து சிறுபான்மை மக்களை தனிமைப்படுத்த அவ்வமைப்பு செய்யாத முயற்சிகள் இல்லை. எனினும் அவை எதுவும் பலிக்கவில்லை. அதற்கு இந்த மழையே சாட்சி.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச் செல்லும் இடங்களிலெல்லாம் தலைவரிடமும் எம்மிடமும் ஒருமித்த குரலில் மக்கள் சொல்வது ஒன்றே ஒன்றைத்தான். 'அதிகாரிகள் வரவில்லை, ஆளுங்கட்சியினர் வரவில்லை, கவுன்சிலரும் வரவில்லை, கவர்மெண்டே இயங்கவில்லை; வந்ததும், நிவாரணம் தந்ததும் முஸ்லிம் அமைப்புகளும் கிறித்தவ தொண்டு நிறுவனங்களும்தான்' என்றனர்.
மக்கள் பணியின் மூலம் மனங்களை வெல்வோம்!