தற்போதைய செய்திகள்
ராமர் கோயில் கட்ட அயோத்திக்கு வந்து சேர்ந்தன 2 லாரி கற்கள்
By dn, அயோத்தி
ராமர் கோயில் கட்ட அயோத்திக்கு வந்து சேர்ந்தன 2 லாரி கற்கள்
By dn, அயோத்தி
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திட்டத்துக்காக விசுவ இந்து பரிஷத் சேகரித்த கற்கள், 2 லாரிகளில் அயோத்திக்கு வந்து சேர்ந்தன.
அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டும் திட்டத்தை விசுவ இந்து பரிஷத் அறிவித்துள்ளது. கோயில் கட்டத் தேவையான கற்களை நாடு முழுவதும் சேகரிக்கப் போவதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. அதன்படி சேகரிக்கப்பட்ட கற்கள் 2 லாரிகளில் அயோத்திக்கு வந்துள்ளன.
தற்போது கற்கள் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கொட்டப்பட்டுள்ளன. பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க, போலீசார் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் மஹந்த் நிருத்திய கோபால் தாஸ் கூறும்போதும் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் மோடி அனுமதி கொடுத்து விட்டார்noni எனவே நேற்று இரவு கட்டுமான பொருட்களை அயோத்தியில் இறக்கியுள்ளதாக தெரிவித்தார்.
மோடியின் உத்தரவு -ராமர் கோவில் கட்டும் திட்டம் அம்பலம்…
வசமாக மாட்டிக்கொண்ட பா ஜக