மக்கள் கூடுமிடங்களில் மாமறைக் குர் ஆனை கொண்டு மக்களை அழைக்கும் தஃவா பணி கடந்த ஒரு மாதத்திற்க்கு மேலாக மழை வெள்ளத்தின் காரணாமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது! கடந்த வெள்ளி முதல் நமது தஃவா பணி மீண்டும் துவங்கியது !
வெள்ளிக் கிழமை மாலை சென்னை அண்ணாசாலை LIC எத்ரில் மதரஸா ஏ ஆசம் வாயில் அருகில் வழக்கம் போல் துவங்கியது ! என்னோடு அப்துல் ஹமிது, அப்துல் அஜிஸ், சாகுல், அல்தாப், அப்துர்ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், திருமறைக் குரான் பிரதிகள் மற்றும் இஸ்லாமியப் புத்தகங்கள் போன்றவற்றை வழங்கி அழைப்பு பணியாற்றினர்! ஏராளமான சகோதரர்கள் ஸ்டாலுக்கு வந்து திருக் குரான் மொழியாக்கங்களை வாங்கிச் சென்றனர்!
அல்ஹம்து லில்லாஹ்!
-செங்கிஸ்கான்