செவ்வாய், 1 டிசம்பர், 2015

முஸ்லிம் - இந்தியாவில் நாம் வெற்றி பெற எந்த தடையும் இல்லை..

இந்திய முஸ்லிம்களே.....
~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு விஷயம் முஸ்லிம்களின் மனதில் ஆழமாக ஊன்றி விட்டது என்றே நினைகிறேன். அவர்கள் தங்கள் என்னமோ அடக்கு முறைக்கு உட்பட்டு நாலாந்திர குடிமகனாக ஆகிவிட்டதாக எண்ணுகின்றனர்....
அந்த எண்ணத்தை தூக்கி எறியுங்கள்....... இந்தியாவில் நாம் வெற்றி பெற எந்த தடையும் இல்லை.....
- தமிழ்நாட்டின் 10 சதவீத மின்சாரத்தை வழங்குவது.... ஒரு முஸ்லிமின் ஆலையில் இருந்து....
- கடல் சார் உணவு ஏற்றுமதி ... முதலிடத்தில் இருப்பது .. முஸ்லிம்... 34000 கோடி ஒரு வருடத்திற்கு....
- மருத்துவ தேவைகளை இந்தியா வில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் வூக்கர்ட் நிறுவனம் தலை சிறந்து விளங்குகிறது...
- தோல் ஏற்றுமதி ஒபாமா போட்டிருக்கும் காலனி... ஆம்பூர் லிருந்து ஒரு முஸ்லிமின் ஆலையிலிருந்து போகிறது....
- பேருந்து, கொரியர், கல்வி, ஆடை, கட்டுமானம், உற்பத்தி எந்த துறையில் முஸ்லிம்கள் சாதிக்கவில்லை....
ஒன்று சொல்லட்டுமா.... முஸ்லிம்கள் நல்லவர்கள்... மோசம் செய்ய மாட்டார்கள் .... மது அருந்த மாட்டார்கள்.... நாணயமாக இருப்பார்கள் என்ற எண்ணம் சமூகத்தில் பலரிடம் உள்ளது.... ( நம்மில் சிலர் அப்படி இல்லாவிட்டாலும் ).. இது வேறு எந்த சமூகதிருக்கு உள்ளது ? .. என்று சிந்தித்து பாருங்கள்....
உங்கள் மீது ஒரு கல் விழுந்தாலும் .... நம் மீது விழாமல் தன் மீது தாங்கி கொள்ள பல இந்து சகோதரர்களை கொண்டிருக்கிறோம்
முதலில் எதிர்த்து குரல் கொடுப்பது நமது மாற்று மத சகோதரர்கள் தானே....
இது நம் நாடு....நம் அனைவரின் நாடு..... . நமக்கு முன்னேற அதிகம் வாய்ப்பு உள்ளது....எந்த தடையும் இல்லை.....
ஆகவே தாழ்வு மனப்பான்மையை தூக்கி போடுங்கள்....
கல்வியில் நமது பிள்ளைகளை சிறந்து கொண்டு வருவோம்....ஒழுக்க விழுமியத்தோடு ....
அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவோம்.... நாமும் வளர்வோம்.... நமது நாட்டையும் வளப்படுத்துவோம்