ஞாயிறு, 6 டிசம்பர், 2015

" நாங்க பீப் பிரியாணி சாப்பிட மாட்டோம் என்று யாருங்க சொன்னது. எவனோ அட்ரஸ் இல்லாத பன்னாடைகள் சொல்லுவதை கேட்டு எங்களை நீங்கள் இப்படி நினைத்து விட்டீர்களே.

சென்னையில் மீட்பு பணியில் இருக்கும் ஒரு நண்பரிடம் (அவர் முகநூலில் இல்லை ) பேசிக்கொண்டு இருக்கும் போது அவர் சொன்ன தகவல் :
நாங்கள் ஐந்து பேர் வளசரவாக்கம் பகுதியில் உணவு விநியோகம் செய்து கொண்டு இருந்தோம். அப்போது இரண்டு வகையான ( வெஜ் - நான் வெஜ் ) உணவுகளை கொடுத்துக்கொண்டு இருந்தோம். அப்போது சில இந்து மத சகோதரர்கள் உணவுக்காக வந்தார்கள். அவர்களிடம் நாங்கள் வெஜ் உணவுகள் தீர்ந்து விட்டது. கொஞ்சம் பொறுங்கள் போய் எடுத்துக்கொண்டு வருகிறோம். என்று சொன்னோம். அப்போது அந்த சகோதர்கள் இப்போது இருப்பது என்ன உணவு என்று கேட்டார்கள். நாங்கள் பிரியாணி என்று சொன்னோம்....
அதனால் என்ன தாங்க என்று கேட்டார்கள்....
இல்லைங்க இது பீப் பிரியாணி . நீங்கள் விரும்ப மாட்டீர்கள். ஐந்து நிமிடம் பொறுங்கள் வெஜ் உணவு கொண்டு வந்து தருகிறோம் என்று சொன்னோம்...
அதற்க்கு அந்த நண்பர்கள் சொன்ன வார்த்தை தான் கண் கலங்க வைத்தது..
" நாங்க பீப் பிரியாணி சாப்பிட மாட்டோம் என்று யாருங்க சொன்னது. எவனோ அட்ரஸ் இல்லாத பன்னாடைகள் சொல்லுவதை கேட்டு எங்களை நீங்கள் இப்படி நினைத்து விட்டீர்களே. எங்களை மாட்டுக்கறி சாப்பிடாதே என்று சொன்னவனுகளை நாலு நாலா தேடிகிட்டு இருக்கிறோம். எவனுமே வரல. இப்போதான் எங்களுக்கு புரிகிறது யார் நண்பன் யார் எதிரி என்று. இந்த நிலைமையை எல்லாம் சரி ஆனா பிறகு நீங்கள் எங்க வீட்டுக்கு வாங்க பெரிய விருந்தே வைக்கிறோம் " என்று சொன்னார்கள்....
இவர்களுக்காக என் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்....
என்று கூறினார்...
நன்றி சகோ