ஞாயிறு, 13 நவம்பர், 2016

ஏ.டி.எம்மில் பணம் கிடைக்க இன்னும் இரண்டு வாரங்கள் ஆகுமாம்!


இன்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.  'இந்தியாவில் எல்லா ஏ.டி.எம்களில் இருந்தும் சீராக மக்கள் பணம் எடுக்க, இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகும்' என்று கூறியுள்ளார். ஏ.டி.எம் மெஷின்களில் புதிய ரூபாய் நோட்டுகளை வைப்பதற்காக சில மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது என்றும், சில நாட்களுக்கு நூறு ரூபாய் நோட்டு மட்டுமே ஏ.டி.எம்களில் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.