சனி, 5 டிசம்பர், 2015

கை நீட்டி மக்கள் உதவிக்கு அழைக்க வேடிக்கை பார்த்த அரசு பேரிடர் மீட்பு படையினர்

சற்று முன்பு தான் லாயர் ஜிஃப்ரி உடன் பேசினேன்.
"கை நீட்டி மக்கள் உதவிக்கு அழைக்க வேடிக்கை பார்த்த அரசு பேரிடர் மீட்பு படையினர் அமைதியாக டீ குடித்து கொண்டு இருக்கிறார்கள்" என்றார் ஜிஃப்ரி.
"போய் உதவி செய்யுங்கள்" என கூறியதற்க்கு நீர் அதிகமா இருக்கு குறையட்டும் என கூறி இருக்கிறார்கள்.
"நீர் குறையனும் என்றால் நீங்கள் எதற்கு என திட்டிவிட்டு" உடனே நம் சகோதரர்கள் நீரில் குதித்து மீட்பு பணியில் இறங்கி இருக்கிறார்கள்.
அதையும் தடுக்கும் விதமாக போலீஸ் தடை செய்கிறது இங்கே ஒன்றும் பிரச்சினை இல்லை கிளம்புங்கள் என விரட்டுகிறது என்றார், ஆனால் எங்கள் முன்னாலே சில பிணங்கள் மிதந்து வந்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றார்.
அது மட்டும் இல்லாமல் அரசியல்வாதிகளும், ராணுவமும் மாறி மாறி நிவாரண பொருட்களை பிடிங்கிகொள்கிறார்கள். உதவ வரும் படகுகள் பணம் கேட்கிறது எனவும் தோளில் சுமந்து சென்று தான் நிவாரண பொருட்களை அளிக்கின்றோம் என கூறினார்.
மாணிக் வீரமணி, Mohamed Mydeen, லாயர் ஜிஃப்ரி உள்ளிட்ட நம் முகநூல் சகோதரர்கள் இருபதுக்கும் அதிகமானோர் பல நூறு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வந்து சேவையாற்றி கொண்டு இருக்கிறார்கள்.
இறைவன் அவர்களுக்கு அருள் புரிவானாக.
Post courtesy : Fahad Ahmed