வியாழன், 3 டிசம்பர், 2015

மீண்டும் கனமழை! - மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த SDPI கட்சி தொண்டர்களுக்கு மாநில பொதுச் செயலாளர் அறிவுறுத்தல்!


********************************************************
SDPI கட்சியின் தொண்டர்களுக்கு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் விடுக்கும் அறிக்கை:
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கனமழை கடலூர், சென்னை. காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை புரட்டிப்போட்ட நிலையில், தற்போது மீண்டும் கனமழை பெய்து வருகின்றது. 97 ஆண்டு கால வரலாற்றை முறியடிக்கும் வகையில் மிக அதிக மழைப்பொழிவு இன்றைக்கு சென்னை நகரில் பெய்துள்ளது. இதனால் சென்னை நகரெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.
பல முக்கிய ஏரிகளிலிருந்து அதிகமான அளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால் மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளில் நீர் புகுந்துள்ளது. கடந்த வாரம் பெய்த கனமழை பாதிப்புகளிலிருந்து இன்னும் மக்கள் முழுமையாக விடுபடாத நிலையில் மீண்டும் கனமழை ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வாழும் பெரும்பாலான மக்கள் சொல்லொண்ணா துயருக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த வாரம் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மீட்பு பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துகுடி மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினர். மேலும் நிலவேம்பு கசாயம் வழங்குவது, மருத்துவ முகாம் நடத்துவது உள்ளிட்ட சுகாதாரப் பணிகளிலும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தற்போது பெய்துவரும் மழையால் இன்னும் அதிகமான மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னர் களமிறங்கி நிவாரணப் பணிகளை மேற்கொண்டதை போன்று தற்போதும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் முழு அளவில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
M.நிஜாம் முகைதீன்
மாநில பொதுச்செயலாளர்
எஸ்.டி.பி.ஐ கட்சி
தமிழ்நாடு
இஸ்லாமியர்களின் ஊடகத்துறை's photo.

Related Posts: