புதன், 9 நவம்பர், 2016

50 நாட்களில் ரூ.14 லட்சம் கோடி.. மோடி சொல்வது சாத்தியமா.??

செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடி திடீரென மக்களிடம் பேசினார்.
அப்போது அடுத்த 50 நாட்களுக்குள் உலகில் இருக்கும் அனைவரும் தங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கி அல்லது தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ள வேண்டும். இன்று இரவு 12 மணி முதல் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்.
இந்த அறிவிப்பினால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் முதல் நமக்குத் தினமும் உணவு அளிக்கும் விசாயிகள் வரை அனைத்து மட்டங்களிலும் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் உள்ள எல்லா 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வெறும் 50 நாட்களுக்குள் மாற்ற முடியுமா..? மொத்த எவ்வளவு இருக்கு தெரியுமா..? 14 லட்சம் கோடி ரூபாய்..!

உலகம் முழுவதும் இந்திய நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகள் சுமார் 14 லட்சம் கோடி அதாவது 217 பில்லியன் டாலர் அளவிலான தொகை புழக்கத்தில் உள்ளது. இப்படி இருக்கும்போது பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்திய நாணயங்களில் அதிக மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது. அது வெறும் காகிகதம் தான் என்று கூறிவிட்டார்.
அடுத்த 50 நாட்களுக்குள் இதை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ள வேண்டும் என உத்திவிட்டுள்ளார் மோடி. உண்மையிலேயே இது சாத்தியமா..? அல்லது வெறும் கண்துடைப்பு தானா..? 

Related Posts: