வியாழன், 3 நவம்பர், 2016

பொறுமை காக்கிறோம் நீதி கிடைக்கும் என்று....


போபால் எண்கவுன்டர் அல்ல....!
திட்டமிடப்பட்ட படுகொலையே...!!
அம்பலமாகும் உண்மைகள்....!!!
விசாரணை கைதிகள் தப்பவில்லை காக்கி சட்டைகாரன்களால் அழைத்துச் சென்று படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் நிறுபிக்கின்றன.
*போபால் சிறை ஏதோ சாதாரண சிறையல்ல இந்தியாவின் முதல் தரம் பெற்ற பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ISO-9001 சான்றிதல் பெற்ற சிறைச்சாலை. இங்கே தப்பிப்பது எளிதல்ல.
ஒரு அறையிலிருந்து வெளியேற 8 சாவிகள் வேண்டும். இதனை அவர்களுக்கு வழங்கியது யார்?
சிறைசாலை வளாகத்தை அடையவே மூன்று Sector Gate கள் உள்ளே அமையப்பெற்றுள்ளது. இதைவிட்டு வெளியேற வேண்டுமானால் அதற்கு மூன்று சாவிகள் வேண்டும் அதை வழங்கியது யார்?
இது மட்டுமல்ல சிறைச்சாலையின் 40 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட சுற்றுச்சுவரை தாண்ட வேண்டுமெனில் ஏணிப்படிகளான Ladder Syestem பயன்படுத்தி இருக்க வேண்டும். இதையும் சேர்த்தே வழங்கியதா காவல்துறை?
*இதெல்லாம் தேவைப்படவே இல்லை காரணம் Spot க்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று போட்டுத்தள்ளியதே காவல்த்துறைதான் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்களை இங்கே சமர்ப்பிக்கிறோம்.*
தடயங்கள் கிடைத்துவிட கூடாது என்பதற்காக முன்பே திட்டமிட்டு கண்காணிப்பு கேமிராக்களை செயல்படாதவாறு செய்துள்ளது காக்கிச்சட்டை.
தலைமைக் காவல்த்துறை அதிகாரி விசாரணை கைதிகளால் கொல்லப்பட்டிருந்தால் வளாகத்தின் எச்சரிக்கை மணி அடித்திருக்க வேண்டும். ஆனால் சிறைச்சாலையிலேயே எண்கவுன்டரை தொடங்கியுள்ளது காக்கிச்சட்டை பிறகு எப்படி மணி ஒலிக்கும்?
2 ஆயிரத்து 400 கைதிகள் உள்ள சிறையில், ஒருவருக்கு கூட சிமி இயக்கத்தினர் தப்பியது தெரியாதாம் எப்படி தெரியும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றதே காவல்த்துறை தானே.
தலைவன் உள்ளே இருக்க தொண்டர்கள் மட்டும் தப்பித்தார்களாம். அவர்கள் தப்பித்தது கூட தெரியாதாம் சிமி அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அபு பைசலுக்கு காவல்த்துறை முன்பே கூறியிருந்தால் தானே அவருக்கு தெரியும்.
விடுதலையை நோக்கி இருக்கும் நிரபராதிகளை இப்படி திட்டமிட்டு அழைத்துச் சென்று ரத்தவெறியாட்டத்தை நிகழ்த்தியுள்ளது காக்கிச்சட்டை அணிந்த காவித்துறை.
இவர்கள் எய்யப்பட்ட அம்புகள் தான் எய்தவர்கள் யார் யார் என்று இந்திய நாட்டின் மக்கள் ஒவ்வொருவனுக்கும் தெரிந்ததே...
காலம் பதில் சொல்லும்....
எய்யப்பட்ட அம்புகளும் ஒருநாள் சிறையிலேயே படுகொலை செய்யப்படலாம். இன்று எண்கவுன்டரில் பலியான காவலரைப் போல...
துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியாலே சாவான்.
பொறுமை காக்கிறோம் நீதி கிடைக்கும் என்று....
நாங்கள் மறுமையை நம்பக்கூடியவர்கள். இம்மையிலும், மறுமையிலும் வெற்றியை நோக்கி காத்துக்கொண்டிருக்கிறோம்.