திங்கள், 7 நவம்பர், 2016

ஒரே நாடு, ஒரே வரி....ஜிஎஸ்டி வரி உள்ளும், புறமும்..

நாடு முழுவதும் ஒரேவிதமான வரிவிதிப்பினை அறிமுகப்படுத்தும் விதமாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள வரிவிதிப்பு முறையே ஜிஎஸ்டி அல்லது சரக்கு மற்றும் சேவை வரி எனப்படுகிறது.
தற்போதைய வரிவிதிப்பு முறை:
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையைப் புரிந்து கொள்ள தற்போதைய வரிவிதிப்பு முறையைத் தெரிந்து கொள்வதுஅவசியம். அதை மேலே உள்ள படம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Gst

Gst2
ஜிஎஸ்டி வரிவிதிப்பு:
சுதந்திரத்துக்கு பிந்தைய மிகப்பெரிய வரி சீர்திருத்தமாகக் கருதப்படும் ஜிஎஸ்டி வரி விதிப்பு மசோதா, நீண்டஇழுபறிக்குப் பின்னர் கடந்த ஆகஸ்ட் 3-ல் மாநிலங்களவையில் நிறைவேறியது. இதையடுத்து மாநில சட்டப்பேரவைகள் ஒப்புதல் அளித்த பின்னர் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியும் ஜிஎஸ்டி மசோதாவுக்குஒப்புதல் அளித்தார்.
ஜிஎஸ்டி சட்டத்தினை அமல்படுத்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் 5, 12, 18 மற்றும் 28 என 4 அடுக்கு வரி விகிதத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு 2017ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 2011-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரைவு மசோதாவில் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், எரிவாயு, விமான எரிபொருள் மற்றும் மதுபானங்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை.

Related Posts: