விஜய் மல்லையாவின் கடனைத் தள்ளுபடி செய்தது போல, தனது கடனான ரூ.1.5 லட்சத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி பாரத ஸ்டேட் வங்கிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
நாசிக்கை அடுத்த திகம்பேஷ்வர் நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணிபுரிபவர் பாவுராவ் சோனாவன். இதுகுறித்து அவர் கூறுகையில், விஜய் மல்லையாவின் கடனைத் தள்ளுபடி செய்தது போல எனது கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கடிதத்தில் மல்லையாவின் கடனைத் தள்ளுபடி செய்த செயலைப் பாராட்டியதாகவும், அதேபோல தனது கடனையும் தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மகனின் சிகிச்சைக்காக அந்த கடனை வங்கியிலிருந்து பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, கிங்பிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையாவின் 7,000 கோடி ரூபாய் கடனை பாரத ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்ததாகத் தகவல் வெளியானது.
பதிவு செய்த நாள் : November 20, 2016 - 07:26 PM