28 2 2022
நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பானது கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து 8,013 ஆக பதிவாகியுள்ளது.
கொரோனா தொற்றின் மூன்றாம் அலையானது கடந்த 2021ம் ஆண்டில் இறுதியில் பரவத் தொடங்கி ஜனவரி வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் இரண்டாம அலைக்கு பிறகு மக்கள் அனைவரும் மீண்டும் அதிக பாதிப்புக்குள்ளாகினர். தற்போது சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கையாக கணிசமாக குறைந்துவருகிறது. டிசம்பர் 2021 மற்றும் ஜனவரி 2022ல் 1 லட்சத்தை தொட்ட தினசரி பாதிப்பானது படிப்படியாக குறைந்து கடந்த 24 மணி நேரத்தில் 8.013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய சிகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் 8.013 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதோடு 16,765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,23,07,686ஆக அதிகரித்துள்ளது. மேலும் 119 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,13,843 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7,23,828 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதனால் இதுவரை பரொசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 76,74,81,346 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையானது கணிசமாக குறைந்து 1,02,601 என்ற எண்ணிக்கையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
source https://news7tamil.live/less-than-10-thousand-daily-corona-exposure-in-the-country.html