அனைத்து வங்கிகளிலும் இஸ்லாமியர்களுக்கென்று தனியாக ஷரியத் வங்கி முறையைக் கொண்டுவருவது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி கடனுக்கோ, வைப்புத்தொகைக்கோ வட்டிபெறுவது குற்றமாகும். இதனால் வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள இஸ்லாமியர்களில் பலர் வட்டித் தொகையை எடுக்காமல் உள்ளனர்.
அதுபோல் வைப்புத்தொகைக்கு வட்டி வழங்கப்படும் என்பதால் வங்கிகளில் பணத்தைச் செலுத்தாமலும் உள்ளனர். இந்தப் போக்குக்குத் தீர்வுகாணும் வகையில் அனைத்து வங்கிகளிலும் இஸ்லாமியர்களுக்கென்று தனி வங்கி முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது.
இது தொடர்பாக நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி, சட்ட அமைச்சகம் ஆகியவற்றிடையே ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது. ஷரியத் வங்கி முறையில் வைப்புத் தொகைக்கு வட்டியில்லாததைப்போல், கடனும் வட்டியில்லாமலே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.