நான்கு மாநிலங்களைத் தவிர இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் கடந்த ஆறு வாரங்களில் குறைந்த கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை, தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஒரு சில மாநிலங்களில், இந்த எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா, திரிபுரா மற்றும் யூனியன் பிரதேசமான லடாக் ஆகிய மாநிலங்கள் மட்டுமே இந்த அதிகரிப்பிலிருந்து விலகியிருக்கிறது.
ஏப்ரல் 1 முதல் நாட்டில் கிட்டத்தட்ட 2.1 லட்சம் கோவிட் -19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதில், 55 சதவீதத்திற்கும் அதாவது 1.18 லட்சத்துக்கும் அதிகமானோர், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பதிவாகியுள்ளன.
இந்த ஐந்து மாநிலங்களில் ஒவ்வொன்றிலும், கடந்த ஆறு வாரங்களில் மொத்த எண்ணிக்கையில், 60 சதவீதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்த காலகட்டத்தில் அவர்களின் இறப்பு எண்ணிக்கை 2 முதல் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது.
இது மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும். சில மாநிலங்களில், அவர்களின் இறப்பு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 80 சதவீதம் ஏப்ரல் 1-க்குப் பிறகு பதிவாகியுள்ளது.
இந்த எண்ணிக்கை பீகாரில் மிக அதிகமாக உள்ளது. அங்கு ஏப்ரல் 1-க்குப் பிறகு மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கையில் 83 சதவீதம் பதிவாகியுள்ளது. ஆனால், இதற்கு முக்கிய காரணம் இரண்டு நாட்களுக்கு முன்பு தரவு சுத்திகரிப்பு முறையில் மாநில அரசு கிட்டத்தட்ட 4,000 இறப்புகள் சேர்த்ததுதான்.
முன்னர் கணக்கிடப்படாத இந்த மரணங்கள் நடந்த காலம் தெளிவாக இல்லை. மேலும், அவர்களில் சிலர் கடந்த ஆண்டிலிருந்து கூட இருக்கலாம்.இரண்டாவது அலையில் அனைத்து மாநிலங்களிலும் கோவிட் இறப்பு விகிதம் இரட்டிப்பு!
நான்கு மாநிலங்களைத் தவிர இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் கடந்த ஆறு வாரங்களில் குறைந்த கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை, தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஒரு சில மாநிலங்களில், இந்த எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா, திரிபுரா மற்றும் யூனியன் பிரதேசமான லடாக் ஆகிய மாநிலங்கள் மட்டுமே இந்த அதிகரிப்பிலிருந்து விலகியிருக்கிறது.
ஏப்ரல் 1 முதல் நாட்டில் கிட்டத்தட்ட 2.1 லட்சம் கோவிட் -19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதில், 55 சதவீதத்திற்கும் அதாவது 1.18 லட்சத்துக்கும் அதிகமானோர், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பதிவாகியுள்ளன.
இந்த ஐந்து மாநிலங்களில் ஒவ்வொன்றிலும், கடந்த ஆறு வாரங்களில் மொத்த எண்ணிக்கையில், 60 சதவீதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்த காலகட்டத்தில் அவர்களின் இறப்பு எண்ணிக்கை 2 முதல் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது.
இது மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும். சில மாநிலங்களில், அவர்களின் இறப்பு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 80 சதவீதம் ஏப்ரல் 1-க்குப் பிறகு பதிவாகியுள்ளது.
இந்த எண்ணிக்கை பீகாரில் மிக அதிகமாக உள்ளது. அங்கு ஏப்ரல் 1-க்குப் பிறகு மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கையில் 83 சதவீதம் பதிவாகியுள்ளது. ஆனால், இதற்கு முக்கிய காரணம் இரண்டு நாட்களுக்கு முன்பு தரவு சுத்திகரிப்பு முறையில் மாநில அரசு கிட்டத்தட்ட 4,000 இறப்புகள் சேர்த்ததுதான்.
முன்னர் கணக்கிடப்படாத இந்த மரணங்கள் நடந்த காலம் தெளிவாக இல்லை. மேலும், அவர்களில் சிலர் கடந்த ஆண்டிலிருந்து கூட இருக்கலாம்.
இந்த காலகட்டத்தில் நாட்டின் இறப்பு எண்ணிக்கையும் சுமார் 1.64 லட்சத்திலிருந்து இப்போது 3.73 லட்சத்துக்கு மேல் அதாவது இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. கடந்த ஆறு வாரங்களில் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து இறப்பு விகிதத்தில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
உத்தரகண்ட், அசாம், கோவா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில், மொத்த இறப்புகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை கடந்த ஆறு வாரங்களில் நிகழ்ந்துள்ளன. இதன் பொருள், இந்த மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கை இந்த நேரத்தில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்பதுதான்.
மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகியவையும் இந்த வரிசையில் அடங்கும். இருப்பினும் இந்த மாநிலங்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவு.
மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள், கடந்த ஆறு வாரங்களில் நிகழ்ந்த இறப்புகளில் 57 சதவீதம் பதிவு செய்துள்ளது.
ஒப்பீட்டளவில் அதிக இறப்பு எண்ணிக்கையைக் கொண்ட இரண்டு மாநிலங்களான ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம், கடந்த ஆறு வாரங்களில் சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய 24 மணி நேரத்தில் இந்தியாவில் 80,834 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது, 71 நாட்களில் மிகக் குறைவானது. அதே சமயம் தினசரி சோதனை பாசிட்டிவ் விகிதம் மேலும் 4.25 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் ஆன்லைனில் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, நாட்டில் 10,26,159 கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இது முந்தைய 24 மணிநேரங்களை விட, 54,531 குறைவு. இந்த காலகட்டத்தில் மொத்தம் 3,303 இறப்புகள் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையில் ஏராளமான பழைய இறப்புகளும் அடங்கும்.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 2,94,39,989 பேர் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,70,384 பேர் கோவிட் தொடர்பான இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளனர்.
source https://tamil.indianexpress.com/india/toll-the-second-wave-took-in-all-but-four-states-deaths-doubled-in-last-six-weeks-tamil-news-313592/