ரூ.500/ரூ.1000 இனி செல்லாது என்பது தொடர்பான அறிவிப்பு வெளிவந்தது முதல் நாடே பெரும் கலவர சூழலில் உள்ளது, எங்கு பார்த்தாலும் எளியவர்கள் தங்களின் சேமிப்பை பாதுகாக்க அலைந்து மண்டைகாய்ந்து திரிகிறார்கள்.
இந்த சூழலில் அறிவிப்பு வெளியான நவம்பர் 8,2016 காலை கொல்கத்தாவின் இந்தியன் வங்கியின் செண்டரல் அவென்யு கிளையில் கணக்கு எண் (a/c no- 554510034)ல் இரு தவணையாக ரூ.60 லட்சமும், ரூ.40 லட்சமும் ஒரே நாளில் செலுத்தப்பட்டுள்ளது. அதே போல் கணக்கு எண் ( a/c no - 6365251388)ல் நவம்பர் 1 முதல் நவம்பர் 6 தேதிக்குள் பல முறை ரூ.50 லட்சமும் ரூ.75 லட்சம் தொகைகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு வங்கி கணக்குகளும் “மேற்கு வங்க - பாரதிய ஜனதா கட்சி”க்கு சொந்தம்.
அவர்கள் வங்கியில் தான் செலுத்தியிருக்கிறார்கள், அதற்கான வரியை அவர்கள் செலுத்துவார்கள் என்றாலும், இப்படி ஒரு அறிவிப்பு தேசத்திற்கு அறிவிப்பதற்கு முன்னர் தங்கள் கட்சியினருக்கு எப்படி தகவ்ல் தெரிவித்தார்கள். கட்சிக்கு மட்டுதானா அல்லது வேண்டியவர்களுக்கு எல்லாம் முன்பே தகவல் சென்று விட்டதா.



(இந்த செய்தியை வங்கத்தில் பல பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளது,
ஆதாரம் கீழே உள்ள link உள்ளது )