பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து மருந்து வாங்க வரும் வாடிக்கையாளர்கள் அடையாள அட்டை நகலை எடுத்து வருமாறு மருந்து வணிகர் சங்கம் அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க செயலாளர் செல்வன், மருந்து கடைகளுக்கு, வங்கிகளில் இருந்து வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே சில்லறை வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய கோரி வரும் 23ம் தேதி நடைபெற இருந்த மருந்து கடை உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அவர் தெரிவித்தார்.