புதன், 16 நவம்பர், 2016

பணம் மாற்றி தருவதாக கூறி ரூ.25,000 மோசடி


புதுக்கோட்டை அருகே வங்கியில் பணம் மாற்றி தருவதாக கூறி 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். 
​பணம் மாற்றி தருவதாக கூறி ரூ.25,000 மோசடி

அறந்தாங்கியை அடுத்த துவரடிமனை கிராமத்தை சேர்ந்த சித்ரா என்பவர் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற அப்பகுதியில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கி முன் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது அவரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பணம் மாற்றி தருவதாக கூறி 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று சென்றுள்ளார். எனினும் பல மணி நேரம் ஆகியும் அவர் திரும்பாததால், சித்ரா போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை ஏமாற்றிச்சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.