வெள்ளி, 28 ஏப்ரல், 2017

ஊட்டியில் அணை கட்டும் இளைஞர்கள் முயற்சி…குவியும் ஆதரவு.. நடக்குமா

தமிழகத்தில் தன்னெழுற்சியாய் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டதிற்கு பிறகு இளைஞர்கள் தமிழ் சினிமா நடிகர்களை ரொம்பவே வெறுத்து விட்டார்கள். காரணம் அத்தனை பேருமே பீட்டாவிற்கு ஆதரவாளர்கள் என்கிற அவப்பெயர்.
இதனையடுத்து வெளிவந்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. காரணம் முன்போல் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு பாலாபிஷேகம்..! கட்டவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்ய இன்று யாரும் முன் வரவில்லை.
ஒரு படம் வெற்றியடைவதற்கும்,பிளாப் ஆவதற்கும் இளைஞர்கள் தான் மாபெரும் மந்திரசக்திகள்.இந்த இளைஞர்கள்தான் தற்போது தமிழக மக்களுக்கு உண்மையான ஹீரோக்கள்.காரணம் இளைஞர்களின் தன்னலமற்ற சமூக அக்கறை.
இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வையடுத்து இந்த விஷயம் சில பெரிய நடிகர்கள் மத்தியில் அலசப்பட்டது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில் சில பத்திரிக்கையாளர்கள். சரிந்த இமேஜை தூக்கி நிறுத்த என்ன செய்யலாம்..?
தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்ட நாட்கள் தீர்க்கப்படாமல் உள்ள ஒரு விஷயம் என்றால் அது காவிரி நதிநீர் பிரச்சனைதான்.இந்த காவிரி விஷயத்தை வைத்துதான் இரு மாநில அரசியல்வாதிகளுமே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் இன்று வரை கர்நாடகா,ஆந்திரா,கேரளா என அண்டை மாநிலத்தாரிடம் தண்ணீருக்காக கையேந்திக் கொண்டிருக்கிறோம். அவர்களும் கெத்தாக முடியவே முடியாது என்று மார்தட்டி கொண்டிருக்கிறார்கள். ஆனால் கர்நாடகாவுக்கே நாம்தான் தண்ணீர் தந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா?
ஆம் ஊட்டியில் உள்ள மோயர் ஆற்றின் ஒரு பகுதி பவானிசாகர் அணைக்கும், மற்றொரு பகுதி கர்நாடகாவிலும் பாய்கிறது.கர்நாடகாவில் பாயும் தண்ணீர் கபினி அணையிலும், நூகு அணையிலும் கலக்கிறது.
பின்னர் இரண்டும் இணைந்து டி.நரசிபுரா என்ற இடத்தில் காவிரியில் கலக்கிறது. அதன்பிறகு ஒகேனக்கல் வழியாக தமிழகத்திற்குள் பாய்கிறது. ஆனால், நாம் கொடுக்கும் தண்ணீரை நமக்கே கொடுக்காமல் கர்நாடகம் நம்மை வஞ்சித்து கொண்டுள்ளது.
ஊட்டியில் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களிடையே பரவி வரும் தகவல் கர்நாடகாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இதுதான் சரியான தருணம் என்கிறார்கள் நடிகர்கள். ஊட்டியில் அணைகட்ட இளைஞர்கள் களம் இறங்கி விட்டார்கள்.
நதிகள் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ரூ.1 கோடி தருவதாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஒரு பெரிய கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்து எவ்வளவு வருகிறதோ, அந்த தொகையை அப்படியே ஊட்டியில் அணைகட்ட கொடுத்து விடலாமா என்று ஆலோசனைகள் நடந்துள்ளதாம்.
இந்த விஷயத்தை நடிகர்கள் இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், இது பற்றி தீவிர பரிசீலனைகளுக்கு பிறகே வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.

http://kaalaimalar.net/tn-youths-to-built-dam-in-ooty/