1798ல் எழுதப்பட்ட இக்கடிதம் ஆங்கிலேயனின் சதியால் திப்புவை வந்தடையவில்லை. ஆம்! திப்புவின் தூதர் மீர் அலிகான் இக்கடிதத்தை பெற்றுக்கொண்டு இந்தியாவரும் வழியில் புனிதமக்கா சென்று உம்ரா செய்ய நாடினார்.
மக்காவில் தங்கி தமது கிரியைகளை நிறைவேற்றுவதில் லயித்திருந்த போது, ஆங்கிலேய ஒற்றர்கள் அக்கடிதத்தை அவரது அறையிலிருந்து திருடி விட்டனர்.
இப்படி இந்தியா வரவேண்டிய அக்கடிதம் இங்கிலாந்து போய் சேர்ந்தது. இவ்வாறு மாவீரன் நெப்போலியனுக்கும் திப்புவுக்கும் இடையில் ஏற்படவிருந்த நாட்டுக்கான விடுதலை போராட்ட ஒப்பந்தம் நடக்க முடியாமலே போனது.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை தோற்கடிக்க மாவீரன் நெப்போலியன் இந்தியாவில் தேர்ந்தெடுத்தது திப்புவை மட்டுமே...
அந்த நட்பை வலுப்படுத்துவதற்காக திப்புவுக்கு நெப்போலியன் எழுதிய கடிதம்
--------------------------------------------------------------------------------
சுதந்திரம் ! பிரெஞ்சுக் குடியரசு ! சமத்துவம் !
தலைமைச் செயலகம் கெய்ரோ 1798
குடியரசின் 7ம் ஆண்டு. புலியோஸ் 7ம் நாள்
”தேசிய அமைப்பின் தலைமைத் தளபதி நெப்போலியன் போனபார்ட் தனது உன்னத நண்பரும் மகத்தான சுல்தானுமாகிய திப்பு சுல்தானுக்கு எழுதுவது …”
செங்கடல் கரையோரம் நாங்கள் வருகைபுரிய இருப்பதை ஏற்கனவே தங்களுக்கு தெரிவித்துள்ளோம்.
வெல்லற்கரிய வலிமைமிக்க பெரும்படையுடன் பிரிட்டிசாரின் இரும்பு சங்கிலியிலிருந்து தங்களை விடுவிக்க மிக்க விருப்பததுடன் வரவுள்ளோம்.
மஸ்கட் வழியாக தாங்கள் அனுப்பிய தகவல்கள் மூலம் அரசியல் நிலவரம் அறிந்தோம்.
சூயசுக்கோ கெய்ரோவுக்கோ தங்கள் கருத்தை ஆதாரபூர்வமாக பிரதிபலிக்கும் திறமை கொண்ட ஒருவரை அனுப்பவும்.
அவருடன் நான் விவாதிக்க விரும்புகிறேன்.
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு வலிமை சேர்க்கட்டும்.
தங்கள் எதிரிகளை அழிக்கட்டும்.
-– நெப்போலியன் போனபார்ட்
---------------------------------------------------------------------------------
இறைவன் நாடினால் இன்னும் அறிவோம் சுதந்திர போராட்ட வீரர் #திப்பு வை பற்றி..