சனி, 19 நவம்பர், 2016

திருப்பரங்குன்றத்தில் செல்லாதவையாக மாறிய மக்கள் ஓட்டுகள்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர்கள் பதிவு செய்த வாக்குகள் செல்லாதவையாக மாறின.
தமிழகத்தில் 3 தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மட்டும் அரை மணி நேரம் தாமதமாக 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்குச்சாவடியில், சோதனைக்காக பதிவு செய்யப்பட்ட வாக்குகளை வாக்கு இயந்திரத்தில் இருந்து அதிகாரிகள் அழிக்காமல் வைத்துள்ளனர். இதனால் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய உடன் வாக்காளர்கள் பதிவு செய்த வாக்குகள் அனைத்தும் செல்லாதவையாக மாறின. இதனையடுத்து, மண்டல அலுவலர் விரைந்து வந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி செய்த பிறகு அரை மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் மக்கள் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

Related Posts: