புதன், 16 நவம்பர், 2016

ரூபாய் நோட்டு விவகார பின்னணியில் மிகப்பெரிய ஊழல்: ராகுல்காந்தி

ரூபாய் நோட்டு விவகார பின்னணியில் மிகப்பெரிய ஊழல்: ராகுல்காந்தி

பண மாற்றத்தின் பின்னணியில் மிகப்பெரிய ஊழல் இருப்பதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

ரூபாய் நோட்டுக்கள் தொடர்பான மத்திய அரசின் அறிவிப்புக்கு ஒருபக்கம் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், மத்திய அரசின் திட்டமிடாத நடவடிக்கை காரணமாக, சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே மோடியின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கவில்லை என்றும் ராகுல்காந்தி கூறியுள்ளார். 

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முழுமையாக ஆலோசனை செய்யாமல் பழைய ரூபாய் நோட்டுக்கள் தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஒரு நபரின் நினைப்பில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் விமர்சித்துள்ளார். 

பணத்திற்காக வரிசையில் நிற்பவர்கள் அனைவரும் விவசாயிகள் மற்றும் சாதாரண மனிதர்கள் என குறிப்பிட்ட ராகுல்காந்தி, தற்போதைய நிலைமையை சரி செய்ய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்

Related Posts: