ஞாயிறு, 6 நவம்பர், 2016

RTI -RIGHT TO INFORMATION ACT 2005 தகவல் பெறும் உரிமை சட்டம் 2005

RTI -RIGHT TO INFORMATION ACT 2005
தகவல் பெறும் உரிமை சட்டம் 2005
சட்டப்பிரிவு 6(2) மனுதாரர் கேட்கும் தகவல் எதற்காக கோரப்படுகிறது என்ற கேள்விகளை மனுதாரர் யிடம் கேட்க கூடாது.
மனுதாரர் கேட்கும் ஆவணங்களை தர மறுக்க கூடாது ,அதன் எவ்வித வினாவையும் பொது தகவல் அலுவலர் எழுப்பு கூடாது என்பது இந்த சட்டப்பிரிவின் விளக்கம்.
ஆனால் பலர் இன்று தகவல் சட்டத்தை பயன்படுத்தி பொழுதுப்போக்குகாகவும் ,சுய விளம்பர ஆசையில் தகவல் சட்டத்தில் விண்ணப்பம் அனுப்புகின்றனர்.அவ்வகையான விண்ணப்பத்தில் இவர்கள் கேட்கும் தகவல் பொது நலன் சாராமல் இருப்பதால்,பொது தகவல் அலுவலர் சட்டப்பிரிவு 7(9) யை மேற்கோள் காட்டி தகவல்கள் மறுக்கப்படுகிறது.
சட்டப்பிரிவு 7(9) - ஒருவர் கேட்கும் தகவல்கள் பொது அதிகார அமைப்பின் வளங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தில் கேட்கும் தகவல்களை மறுக்க பொது அதிகார அமைப்பு க்கு அதிகாரம் உண்டு .இந்த சட்டப்பிரிவை மேற்கோள் காட்டி சிலர் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.
தேவைக்காக மட்டுமே தகவல் சட்டத்தை பயன்படுத்த வேண்டும்.

Related Posts: