மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் மே 7-ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
நீட் நுழைவு தேர்வு தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதையடுத்து வரும் கல்வியாண்டில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்படி நாடு முழுவதும் 80 நகரங்களில் வரும் மே 7-ம் தேதி இத்தேர்வு நடைபெற உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் மார்ச் 1-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என சிபிஎஸ்இ குறிப்பிட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிப்போருக்கு ஆதார் எண் அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் நீட் தேர்வு இல்லாமல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு வகை செய்யும் மசோதா சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.