வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, விவசாயிகள் எலியை வாயில் கவ்வியபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் ஏற்பட்ட கடும் வறசியின் காரணமாக, பயிர்கள் கருகியதைக் கண்டு பல விவசாயிகள் இறந்தனர்.
இந்நிலையில், இறந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வெண்டுமென, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதே கோரிக்கையை முன்வைத்து, விவசாயிகள் சங்கத்தினர் அரை நிர்வாண பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், எலியை வாயில் கவ்வியபடி பேரணியாக சென்றனர்.