முதுமலை புலிகள் காப்பகத்தில் அடுத்தடுத்து மூன்று யானைகள் இறந்த சம்பவம் வனத்துறையினர், பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பருவமழையின்றி கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் உள்ள வனவிலங்குகளுக்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பகாடு வனப்பகுதியில் சுமார் 50 வயது மதிக்கதக்க ஒரு பெண் யானை இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது.
மசினகுடி வனப்பகுதியில் பிறந்து 5 மாதங்களே ஆன ஓர் ஆண் குட்டி யானையும் நெலாகோட்டை வனப்பகுதியில் இறந்து சில மாதங்களே ஆன ஒரு யானையின் எலும்பு கூடும் கண்டறியபட்டுள்ளதாக வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றை முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் விஜய ராகவன் மற்றும் கோவை மண்டல கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்ததில் வறட்சி மற்றும் வயது காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது.