ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

வடகொரியா ஏவுகணை சோதனை: தென்கொரியா கண்டனம்

வட கொரியா மீண்டும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைச் சோதனையை நடத்தியுள்ளது. இந்தத் தகவலை தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோதனை செய்யப்பட்ட ஏவுகணை எத்தகைய வகையைச் சார்ந்தது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இத்தகைய சோதனைகள் கொரிய பிராந்தியத்தில் பதற்றமான சூழலை உருவாக்குவதாக தென் கொரியா குற்றம்சாட்டியுள்ளது. விரைவில் அணு ஆயுதத்தைத் தாங்கி நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைச் சோதனை செய்யப் போவதகக் கடந்த ஜனவரி மாதத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்திருந்தார்.