வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

சசிகலா மீது டிஜிபியிடம் புகார் மனு

அரசு மற்றும் தனியார் நிலங்களை ஆக்ரமித்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீது தமிழக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுவில், சசிகலாவும், அவரது உறவினர்களும் கடந்த 20 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிலங்களை ஆக்ரமித்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூர், பையனூர், கருங்குழிப்பள்ளம் ஆகிய இடங்களில் 112 ஏக்கர் நிலத்தை சசிகலாவும், அவரது உறவினர்களும் ஆக்ரமித்திருப்பதாக அதில் புகார்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களின் நிலங்களை அவர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.