ரேஷனில் மானிய விலையில் பொருட்களை பெற ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்க ஜூன் 30 வரை அவகாசமும் வழங்கப்பட்டு உள்ளது.
பொது விநியோகத் திட்டத்தை சீரமைக்கும் நடவடிக்கையாக, குடும்ப அட்டையுடன் ஆதார் எண்னை இணைக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கான அறிவிப்பை மாநில அரசுகளுக்கு கூறியுள்ளது. அதன்படி குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்க ஜூன் 30 ஆம் தேதி வரை அவகாசமும் வழங்கப்பட்டு உள்ளது. மாதம் ஒன்றுக்கு 80 கோடி மக்களுக்கு மானிய விலையில் தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
February 09, 2017 - 08:11 PM
http://tv.puthiyathalaimurai.com/detailpage/ImportantNews/india/7/79634/aadhaar-mandatory-to-receive-subsidized-food-grains-from-pds-shops