கடலில் கச்சா எண்ணெய் கலந்து மிகப்பெரிய ஆபத்துகளை ஏற்படுத்திய நிகழ்வு உலகில் பல முறை நிகழ்ந்துள்ளது. சென்னை கடற்கரையோரத்தில் எண்ணெய் கசிவு பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இதற்கு முன் நிகழ்ந்த மிகப்பெரிய எண்ணெய் கசிவுகளை பற்றி தெரிந்துகொள்வோம்.
குவைத் மற்றும் ஈராக் பகுதியில் உள்ள பாரசீக வளைகுடா பகுதியில் நிகழ்ந்த எண்ணெய் கசிவு தொடர்பான பாதிப்புகள் தான் உலகில் இதுவரை மிகப்பெரிய பாதிப்பாக கருதப்படுகிறது. குவைத் - ஈராக் போரின் போது எண்ணெய் வயல்கள் தீ வைக்கப்பட்டன. அமெரிக்க போர்க் கப்பல்கள் குவைத்துக்கு ஆதரவாக வருவதை தடுக்க ஈராக் எண்ணெய் வயல்களில் இருந்து கச்சா எண்ணெய் கடலுக்கு திருப்பி விட்டதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. 1991 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை இப்பாதிப்பு நீடித்தது. மொத்தம் ஒரு லட்சத்து 36 ஆயிரம் டன்னுக்கு மேலான எண்ணெய் கடலில் கலந்தது.
இதற்கு அடுத்தபடியாக 1910 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா பகுதியில் எண்ணெய்க் கிணறு தோண்டப்பட்ட போது எதிர்பாராத வகையில் மிகப்பெரிய அளவில் எண்ணெய் பீறிட்டுக்கிளம்பி நீரிலும் நிலத்திலும் கலந்தது. இந்நிகழ்வு சுமார் 18 மாதம் நீடித்தது. 90 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வெளியேறியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவை ஒட்டி உள்ள மெக்சிகோ வளைகுடா பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட எண்ணெய் கசிவு மற்றொரு பெரிய விபத்தாக கருதப்படுகிறது. பிரிட்டிஷ் பெட்ரோலியம் எண்ணெய் கிணற்றில் இருந்த வெளியான கச்சா எண்ணெய் பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு கடலில் பரவி பேரழிவுகளை ஏற்படுத்தியது. இதற்கு இழப்பீடாக சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயை பிரிட்டிஷ் பெட்ரோலியம் அமெரிக்க அரசிற்கு தந்தது.
பதிவு செய்த நாள் : Februar