புதன், 22 பிப்ரவரி, 2017

தென்சீன கடல் பகுதியில் போர் பதட்டம்? – அதிநவீன போர் கப்பல்களுடன் களமிறங்கிய அமெரிக்கா!

அமெரிக்கா, அதிநவீன போர் கப்பல்களுடன் தென் சீன கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால், கொரிய தீபகற்ப பகுதியில் பெரும் பதட்டமான சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் சீனா இடையே எல்லை மற்றும் வர்த்தகம் தொடர்பான அழுத்தம் ஏற்பட்ட பின்னரே இந்த ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து தென் சீன கடல் வழியிலேயே இடம்பெறுகிறது. மேலும், மிக நீண்ட காலமாக இந்த கடல் பகுதியில் உள்ள நாடுகளுடன் சீனாவுக்கு பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் தென் சீன கடல் பகுதியில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இருப்பினும், தென்சீனக்கடலில் உரிமை கோரி மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, தைவான், பிலிப்பைன்ஸ், வியட்நாம், கம்போடியா, புருனே, உள்ளிட்ட நாடுகள் சீனாவுடன் போட்டிபோட்டு கொண்டிருக்கின்றன.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா பல முறை கடும் கண்டனம் தெரிவித்தது. அமெரிக்காவின் இந்த கண்டனத்திற்கு சீனா கடந்த 15ஆம் தேதி கடும் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்கா தனது அதி நவீன விமானம் தாங்கி போர் கப்பல்களுடன் தென் சீன கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த நடவடிக்கை சட்டத்துக்கு புறம்பானது மட்டுமல்ல தூண்டிவிடும் நடவடிக்கை எனவும் சீனா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இந்த ரோந்து நடவடிக்கையில் யு.எஸ்.எஸ் Carl Vinson விமானம் தாங்கி போர்க்கப்பல்,  யு.எஸ்.எஸ் Wayne E. Meyer போர் கப்பல், F/A-18 jet fighters விமானம் உள்ளிட்டவை ஈடுபட்டுள்ளன.

Related Posts: