வியாழன், 9 பிப்ரவரி, 2017

தமிழ் பொறுக்கிகளே! நீங்க அடிச்சிகிட்டா தான் என் கனவு நிறைவேறும்! சு.சுவாமி ரகசிய திட்டம் அம்பலம்


அரசியலில் தவறான கருத்துக்களை தெரிவிப்பது, அரசியல் தலைவர்களை விமர்சிப்பது போன்றவற்றால் பல்வேறு கண்டனங்களுக்கு ஆளானவர் தான் சுப்பிரமணிய சுவாமி.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தமிழ் பொறுக்கிகள் என்று சுப்பிரமணிய சுவாமி பேசியிருந்தது பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் தற்போது தமிழக அரசியலில் உள்ள குழப்பமான சூழ்நிலையில், அதிமுக உட்கட்சி மோதலுக்கு சில பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள்தான் காரணம் என அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலரான சசிகலா முதல்வர் பதவியை கபளீகரம் செய்ய இருக்கிறார். இதற்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கினார்.
சசிக்கு சு.சுவாமி ஆதரவு அதேநேரத்தில் சசிகலாவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்து வருகிறார்.
பாஜக தலைவர்கள் தற்போது, தமிழக அரசியல் குழப்பங்களின் பின்னணியில் பாஜக தலைவர்கள் சிலர் இரு அணிகளின் பின்னணியிலும் இருக்கிறார்கள் என புது அணுகுண்டை வீசியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
அதே நேரத்தில் பாஜக தலைமையோ மத்திய அரசோ இந்த விவகாரத்தில் தலையிடவில்லை. பாஜக தலைவர்கள் சொந்த ஆதாயங்களுக்காக தலையிடுகிறார்கள் என கூறியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
அத்துடன் தமிழக ஆளுநர் வித்யாசகர் ராவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடனே நீக்க வேண்டும்; இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன் எனவும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமியின் இந்த அதிரடி பேச்சுக்கள், தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழக கவர்னர் பதவியை கைப்பற்றவே இவ்வாறு செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

source: kaalaimalar
http://kaalaimalar.net/subramanian-swamy-2/