வியாழன், 9 பிப்ரவரி, 2017

ஈராக் எண்ணெயைக் கைப்பற்றியிருக்க வேண்டும்: ட்ரம்ப் கருத்து


ஈராக்கில் உள்ள எண்ணெய் வளத்தை அமெரிக்கா முழுமையாக எடுத்திருந்தால், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு வளர்ச்சியடைந்திருக்காது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
எண்ணெய் வளத்தைக் கைப்பற்றியிருந்தால், ஏராளமான பணம் கிடைத்திருக்கும் என்றும் அவர் கூறினார். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு எதிராகப் போரிடுவது தமது அரசின் முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், தேவைப்பட்டால் மெக்சிகோவுக்கு அமெரிக்கப் படைகளை அனுப்பத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/world/8/79347/iraq-oil-will-be-captured-donald-trump