தமிழ்நாடு தற்போது புதிதாக முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருக்காது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து நேற்று அவர் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். நாளை அவர் சட்டப் பேரவையில் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அவருக்கு 124 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக சொல்லப்பட்டாலும், நாளைதான் அதன் முடிவு தெரியும். ஒருவேளை எடப்பாடிக்கு பெரும்பான்மை கிடைக்க வில்லை எனில் அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
இந்நிலையில் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எடப்பாடி பழனிசாமி நாளை வரை முதலமைச்சராக இருப்பாரா என கந்தேகம் இருப்பதாக கூறினார்.
தமிழகத்தில் இனி குடும்ப ஆட்சி என்பதே இருக்கக்கூடாது என தெரிவித்த பொன்னார், தமிழ்நாடு தற்போது புதிதாக பதவியேற்றிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருக்காது என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே தமிழக அரசியல் குழப்பத்துக்ககு காரணம் பாஜக தான் என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வரும் நிலையில் பொன்னாரின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://kaalaimalar.net/pon-radhakrishnan-to-cm/