குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயன்ற பாஜகவின் திட்டம் பலனளிக்காமால் போய்விட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மதுரை: குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயன்ற பாஜகவின் திட்டம் பலனளிக்காமால் போய்விட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமியாவது முதலமைச்சராக நீடிப்பார் என தான் நம்புவதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முதல்வர் நாற்காலிக்காக நடந்து வந்த மோதல் போட்டி நேற்று முடிவுக்கு வந்தது. அதிக எம்எல்ஏக்களை கையில் வைத்திருந்த சசிகலா தரப்பின் ஆதரவு அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த 10 மாதங்களில் தமிழக மக்கள் சந்திக்கும் மூன்றாவது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவர். இவர் தனது பதவியை தக்க வைக்க நாளை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி எஞ்சியுள்ள 4 ஆண்டுகள் முதல்வராக நீடிப்பாரா அல்லது இவரது பதவியும் பறிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பதவியில் தொடருவார? இந்நிலையில் மதுரை வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது எடப்பாடி பழனிச்சாமியாவது பதவியில் தொடர்வார் என்று தான் நம்புவதாக தெரிவித்தார். திருநாவுக்கரசர் வாழ்த்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிதாக அமைந்திருக்கும் தமிழக அரசுக்கு திருநாவுக்கரசர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பாஜக திட்டம் தோல்வி மேலும் தமிழகத்தில் நிலவி வரும் குழப்பத்தால் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயன்ற பாஜகவின் திட்டம் பலனளிக்காமல் போனதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
http://kaalaimalar.net/bjp-ops/
http://kaalaimalar.net/bjp-ops/