புதன், 22 பிப்ரவரி, 2017

ஜல்லிக்கட்டை முடக்கியே தீருவேன்! ஆதாரங்களை திரட்டும் பீட்டா தலைவர்!


ஜல்லிக்கட்டிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை கண்டித்து, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய அறவழி போராட்டத்தால் மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டிற்கு அனுமதி அளித்தது.
இதனால் தற்போது தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பீட்டா அமைப்பின் இந்தியத் தலைவர் பூர்வா ஜோஷிபுரா, ஜல்லிக்கட்டுத் தடை நீக்கப்பட்டப் பிறகு நடந்த போட்டிகளில் ‘மிருகவதை பற்றி ஆதாரங்களைத் திரட்டி வருவதாக’ தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்திருக்கிறார்.
தற்போது ‘இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் அதிகமாக மிருகவதை நடந்ததாகவும், அதற்கான ஆதாரங்களைத் திரட்டியுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த ஆதாரங்களை விரைவிலேயே உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து ஜல்லிக்கட்டிற்கு மீண்டும் தடை உத்தரவு வாங்குவோம் என்று ஆவேசத்துடன் கூறியிருப்பதாக தெரிகிறது.


http://kaalaimalar.net/jallikattu-beta/