வியாழன், 2 பிப்ரவரி, 2017

ஆபாச படங்கள்: பீட்டா இணையதளத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

பீட்டா இணையதளத்தினை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. 

இதுதொடர்பாக அந்த ஆணையம் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், பீட்டா அமைப்பு குறித்து இணையதளத்தில் தேடினால் ஆபாச படங்களே வருகின்றன. ஆபாச படங்கள் இருப்பதால் பீட்டா அமைப்பின் இணையதளத்தினை தடை செய்ய வேண்டும். இதுபோன்ற படங்களைப் பார்ப்பதால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதால் பீட்டா அமைப்பின் இணையதளத்தினை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், பீட்டா அமைப்பின் சமூகவலைதள பக்கங்களையும் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், அதுபோன்ற தகவல்கள் அடங்கிய பீட்டா அமைப்பின் இணையதள முகவரிகளையும் அளித்துள்ளது.