எட்டுக் கோடி மக்களின் குடுமியை ஆளுநருன்னு ஒரு ஆளு டெல்லியின் முகவரா வந்து நம்மூரிலே உட்கார்ந்து கொண்டு ஆட்டுறாரு பாரு.
அப்பப்ப இந்த மாநில சுயாட்சிக்காரர்களெல்லாம் கையைக் கட்டி வாயைப் பொத்திக் கொண்டு ஆடுதுக..!
தமிழ்தேசிய இனத்தின் ஆட்சியை முடிவு செய்வது எட்டுக் கோடி தமிழ் மக்களின் பிரதிநிதிகளா?
தமிழ்தேசிய இனத்தின் ஆட்சியை முடிவு செய்வது எட்டுக் கோடி தமிழ் மக்களின் பிரதிநிதிகளா?
டெல்லியின் ஏஜெண்டா? ஒரு தேசிய இனத்தின் இறையாண்மை என்பது தமக்கான ஒரு அரசை தாமே முடிவு செய்வதுதான்.
ஆனால், நடக்கும் நிகழ்வுகளில் நாம் காண்பது என்ன? இறைவனிடம் அருள் வேண்டி நிற்பது போல ஆளுநர் மாளிகையை அண்டிக் கிடப்பது ஏன்?
சதி செய்து ஆதிக்கம் செய்யும் பாஜகவை அம்பலப்படுத்த அஞ்சுவது ஏன்? டெல்லியின் அதிகாரம் அவ்வளவு மிரட்டுகிறது.
இந்த அடிமைகள் முதல்வராகி மக்களுக்காக செயல்படுவார்களா? ஏகாதிபத்திய டெல்லிக்கு அடிபணிவார்களா?
தமிழக மக்களால் புறந்தள்ளப்பட்ட பாஜக இன்று தமிழக மக்களின் ஆட்சியை ஆட்டிப் படைக்கிறது!
இதையே காங்கிரஸ் முன்பு செய்து வந்தது. நமக்குத் தேவை இறையாண்மை கொண்ட அரசு.
அதுதான் ஜனநாயகம். வாக்களிப்பது என்பது நாம் முடிவெடுப்பது. டெல்லி என்றால் அது சர்வதிகாரம்!
http://kaalaimalar.net/delhi-games/