ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

மோடியின் சிறுபான்மையினர், தலித்கள் கடும் துன்புறுத்தப்படுகின்றனர்: அமேரிக்கா அறிக்கை!


அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர கமிஷன் (USCIRF) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் உள்ள மத சிறுபான்மையினர் மற்றும் தலித் சமூக மக்கள் மதவாதிகளால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று சமீபத்தில் அது வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இந்த அறிக்கையில், வெறுப்பு குற்றங்கள், சமூக புறக்கணிப்புக்கள், கட்டாய மதமாற்றங்கள் இவை அனைத்தும் பாஜக தலைமையிலான அரசு பதவியேற்ற 2014 க்கு பின்னர் கணிசமாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. USCIRF இன் தலைவர் டி.ஜே.ரீஸ், “இந்திய அரசியல் சாசனம், அனைத்து மதங்களை பின்பற்றும் இந்திய குடிமக்களுக்கும் சம உரிமை வழங்கியுள்ளது. ஆனால் நடப்பு இதற்கு நேர் மாற்றமாக உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் இந்தியாவின் பன்முகத்தன்மை பெரும் சவால்களை சந்தித்து வருகின்றது” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவின் பல பகுதிகளில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்றும் இந்திய அரசு தனது சட்டங்களை இந்திய அரசியல் சாசனம் கூறுவது போலவும் சர்வதேச மனித உரிமை கோட்பாடுகளுக்கு உட்படுத்தியும் நாட்டின் இந்த போக்கை மாற்ற வேண்டும் என்று ரீஸ் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், இந்த அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்து தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் USCIRF போன்ற வெளிநாட்டு அமைப்புக்கள் இந்திய குடிமக்களின் நிலை குறித்து தலையிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறிய அவர் இது போன்ற பல அறிக்கைகளை இந்தியா முன்பே பல முறை நிராகரித்துள்ளது என்றும் இவர்களின் இந்த அறிக்கையையும் தாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://kaalaimalar.net/modi-amarica/